உணவு


சிங்கப்பூரில் பல்வேறு இனமக்கள் இருப்பதால், இங்கே பல்வேறு உணவுகள் இருக்கின்றன.
சீன உணவுகள்
சோறு
சீன மத்தியில் சோறு மிகவும் பிரபலமாக இருக்கிறது. அவர்கள் வினிகருடன் சோறு சாப்பிடுவார்கள் (ஸ்டிக்கி அரிசி).

சீன நூடுல்ஸ்
நூடூல்ஸ் சூப் மிகவும் பிரபலம் ஆகும்.

சாஜிங்மியன் (Zhajiangmian) சாவ் மியன் (Shou Mian) போன்ற நூடுல்ஸ் சாப்பிடுவார்கள். சாவ் மியன் நீண்ட வாழ்க்கை மற்றும் நல்ல உடல் நலம் தரும் என்று சிலர் நம்புகிறார்கள். 

சோயாபீன்ஸ்(Soybeans)

இவை பிரபலமாகவும் இருக்கிறது. தவ்வு, சோயா பால், சோய் பேஸ், சோய் எண்ணை போன்ற சோயா பொருள்கள் சீன சாப்பாட்டில் இருக்கும்.

காய்கறிகள்

சீன இலைகள், போக் கோய்(bok choy)(Chinese cabbage), தாவ் மியு (dao-mieu) (Chinese spinach) போன்ற காய்கறிகள் உண்பார்கள்.

நறுமணப்பொருள், மூலிகைகள்  (Herbs and seasonings)

பூண்டு, இஞ்சி, மிளகாய், கடுகு, கொத்தமல்லி போன்ற நறுமணப்பொருள்கள், மூலிகைகள்  பயன்படுத்துவார்கள்.

சீன இனிப்புகள்

அதிர்ஷ்டம் குக்கீகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

முட்டை கஸ்டர்ட் மேட்டரும் பிரபலமாக இருக்கின்றன. அல்லது பருவகால பழங்கள் கொடுப்பார்கள். இவற்றைத் தேநீருடன் சாப்பபிடுவார்கள்.



 
மலாய் உணவுகள்

பெரும்பாலும் மலாய் உணவுகளில் தேங்காய் பால் போடுவார்கள். மலாய் உணவுகளிலும் பிலச்சான்(belacan)(shrimp paste) போடுவார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, எலுமிச்சைப்புல்  போன்ற பொருள்கள் போடுவார்கள். மலாய் உணவில் சோறு தயாரிப்பார்கள். அவர்கள் கையால் சாப்பிடுவார்கள்.


நாசி லமாக்


தேங்காய் பால் சோறு தயாரிப்பார்கள். மலேசியாவில் தேசிய உணவு என்று கூறப்படுகிறது.




சம்பால் சோத்தோங், ரேண்டாங், கட்டுபாட், நாசி கோரேங், சத்தே, மீ ருபுஸ் போன்ற உணவுகள் பண்டிகைகளில்போது அல்லது குடும்ப ஒன்றுகூடல்போது சாப்பிடுவார்கள்.  



  

தமிழ் உணவுகள்

தமிழர்கள் தரையில் உட்கார்ந்து,  வாழைஇலையில் உணவு உண்பார்கள். அவர்கள் கைகளால் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு, இந்த வாழைஇலைகள் மாடுகளுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது.



 காலைச் சிற்றுண்டி நேரத்தில் இட்லி, தோசை, இடியப்பம், அப்பம், ஊத்தப்பம், பூரி, சப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிடுவார்கள். இவை சட்னியுடன் சாப்பிடுவார்கள். சிலர் காப்பி குடிப்பார்கள்.





மதிய உணவு சோறு மற்றும் சாம்பாருடன், ரசத்துடன் அல்லது தயிருடன் சாப்பிடுவார்கள். வட இந்தியர்கள் ரொட்டி, பராட்டா அல்லது நாண் சாப்பிடுவார்கள். உணவை உண்டப்பின், பாயாசம், கேசரி அல்லது பொங்கல் சாப்பிடுவார்கள். கடைசியில், வாழைப்பழம், பழச்சாறு அல்லது லசி வழங்கப்படும்.




ஐரோப்பியா உணவுகள்
பெரும்பாலும் ஐரோப்பியாவர்கள் மாமிசத்தை உண்பார்கள். சில உணவுகளில் திராட்சரசம் போடுவார்கள். பாஸ்டா, உருளைக்கிழங்கு, ரொட்டி போன்ற மாவு உணவுகள் சாப்பிடுவார்கள். இவர்கள் சலாட்டையும் உண்பார்கள்.







குளிரான மற்றும் சூடான இனிப்புகள், அல்லது சூப் தயாரிப்பார்கள். இவர்கள் கரண்டி மற்றும் முட்கரண்டி பயன்படுத்திச் சாப்பிடுவார்கள்.

No comments:

Post a Comment