நான்கினமக்கள் கொண்டாடும் பண்டிகை



சிங்கப்பூரில் நிறைய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த வலைப்பதிவில் நான்கு முக்கிய பண்டிகைகள் பற்றி எழுதப்போகிறேன்.

1. சீனப் புத்தாண்டு

இந்த வருடம் 19  மற்றும் 20 ஆம் தேதி பிப்ரவரி மாதத்தில் சீனப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது. சீனாவில் 'வசந்த விழா' அல்லது 'விளக்கு விழா' என்று கூறப்படுகிறது. இந்த நாளில் தெய்வங்களுக்கும் முன்னோர்களுக்கும் மரியாதை தருகிறார்கள். இவ்விழா சீனா, ஹாங்காங், மகாவ், தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேஷியா, மொரிஷியஸ், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முதல் நாள் இரவு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து இரவு உணவு சாப்பிடுவார்கள். விழாவிற்கு சில நாட்கள் முன்பே அவர்கள் வீட்டைச் சுத்தம் செய்வதற்குக் காரணம் மோசமான அதிர்ஷ்டம் வீட்டிலிருந்து வெளியேறவேண்டும் என்பதே ஆகும். சன்னலில், கதவில் சிவப்பு அலங்காரங்கள் போடுவார்கள்.



முதல் நாள்
தெய்வங்களை  வரவேற்பார்கள். பட்டாசுள், மூங்கில் குச்சிகள் எரிப்பதற்கு காரணம் துஷ்ட ஆவிகளைத் (நியன்)(Nian) துரத்தி விடவே ஆகும். இது சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவிலான வானவேடிக்கையை அரசங்கம் அனுமதித்துள்ளது. இந்த நாளில் சுத்தம் செய்யக்கூடாது. சில குடும்பங்கள்  சிங்கம் நடனக் குழுவினர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைப்பார்கள். ஏனென்றால், கெட்ட ஆவிகள் வெளியேற வேண்டும். மேலும், ஆங் போ பிள்ளைகளுக்கு மற்றும் இளைஞர்களுக்குக் கொடுப்பார்கள்.


2ஆம் நாள்
"ஆண்டு ஆரம்பம்"(Beginning of the Year) என்று கூறப்படுகிறது. திருமணமான மகள்கள் அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களைச் சந்திப்பார்கள். இந்த நாள் அனைத்து நாய்களுடைய பிறந்த நாள் என்று சிலர் நம்புகிறார்கள். அதனால், அதற்கு சிறப்பு விருந்துகள் கொடுப்பார்கள்.
3ஆம் நாள்
கிராமப்புற கிராமவாசிகள் தாளை எரிப்பார்கள். இந்த நாளும் துரதிர்ஷ்டமான நாள். அதனால் அவர்கள் சீனா கோவிலுக்குச் செல்லமாட்டார்கள். அவர்கள் வீட்டில் இருப்பார்கள்.
4ஆம்நாள்
வியாபாரம் நன்றாக இருக்க சிலர் இந்த நாளில் தெய்வங்களை வரவேற்பார்கள்.
5ஆம் நாள்
கடவுள் செல்வம்(God of Wealth) பிறந்த நாள். சிலர் போண்டாவும்(Dumplings), கியாவு சீ (Jiaozi) போன்ற உணவுகள் சாப்பிடுவார்கள்.
7ஆம் நாள்
'பொதுவான நபர் பிறந்த நாள்' என்று கூறப்படுகிறது. செல்வம் மற்றும் வளமை பெருக  யுஷேங் சாப்பிட்டுவார்கள்.

8ஆம் நாள்
தூப எரிப்பார்கள். ஜேட் பேரரசருக்கு(Jade) மற்றும் சியோ ஜூன்னுக்கு(Zao Jun) உணவு பிரசாதம் செய்வார்கள். 


9ஆம் நாள்
ஹெவன்(Heaven) பேரரசர் நன்றி வழங்குவார்கள்.
10ஆம் நாள்
ஜேட் மன்னனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
13ஆம் நாள்
மக்கள் சுத்த சைவ உணவு சாப்பிடுவார்கள். தங்கள் வயிற்றில் சுத்தம் செய்யும் என்று நம்புகிறார்கள்.
15ஆம் நாள்
மெழுகுவர்த்திகளை வீடுகளுக்கு வெளியே ஏற்றிடுவார்கள். ஆவிகளுக்கு வழிகாட்ட மெழுகுவர்த்திகள் ஏற்றிடுவார்கள். சீன புத்தாண்டு விழாவின் இறுதி நாள்.
வீடியோ
சீனாவில் எப்படி சீன புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்

  
குறும்படம் (மறுஇணைவு இரவு உணவு)

2015 சீன புத்தாண்டு பாடல்


2.ஹரி ராயா புவாசா

இந்த வருடம் 17ஆம் நாள் ஜூலை மாதத்தில் கொண்டாடப்படும். 'ஈத் திருவிழா' என்றும் கூறப்படுகிறது. ஒரு மாதம் நோன்பு முடித்து கொண்டாடப்படும் விழா ஹரி ராயா புவாசா . முஸ்லீம் சமுகம் எந்த தவறு செய்து இருந்தாலும், மன்னிப்பு கேட்கும் நாளாகக் கருதப்படுகிறது. மற்றும் உறவை வலுப்படுத்த சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. புதிய  துணிகள் வாங்குவார்கள். வீடுகளை அலங்கரிக்கப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே அழைப்புகள் பரிமாறுவார்கள்.


முதல் நாள் ஒரு மும்முரமான நாள். அவர்கள் மசூதிற்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள். முதலில் முஸ்லீம்கள் அவர்களுடைய பெற்றோர்கள் வீடுகளுக்குப் போவார்கள். சிலர்  அவர்களுடைய முன்னோர்கள் நினைவில் பார்க்க இடுகாடுக்குச் செல்வார்கள்.




அவர்கள் பலவிதமான உணவுகளைக் குடும்பத்தினர்களுடன் சாப்பிடுவார்கள். மாட்டிறைச்சி ரேன்டாங், கட்டுபாட், லோன்தோங், பிஸ்கட்டுகள், கேக்குகள் மற்றும் அன்னாசி மேட்டரை போன்ற பலகாரங்களும் உணவுகளும் சாப்பிடுவார்கள்.

அந்தக் காலத்தில், சிறு மண்ணெண்ணெய் விளக்கால் வீட்டை அலங்கரிப்பார்கள். ஆனால், இப்போது அலங்கார ஒளிர்கின்ற விளக்குகள் பயன்படுகிறது

ஹரி ராயா புவாசா  (1996-1998)

ஹரி ராயா புவாசா மற்றும் சீன புத்தாண்டும் ஒரே வாரத்தில் வந்தது. இது 'கோங்சி ராயா' என்று கூறப்படுகிறது. இது சிங்கப்பூரில் மற்றும் மலேஷியாவில் கூறப்படுகிறது. இது பகிர்வு கொண்டாட்டமாக இருந்தது. இன வேறுபாடு மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மதிக்க கற்றுக்கொண்டார்கள்


ஹரி ராயா புவாசா (2004-2005)
ஹரி ராயா புவாசா மற்றும் தீபாவளி ஒரே வாரத்தில் வந்தது.  'தீபா ராயா' என்று கூறப்படுகிறது. இது சிங்கப்பூரில் மற்றும் மலேஷியாவில் இவ்வாறு கூறப்படுகிறது.

வீடியோ
லேஷியாவில் எப்படி ஹரி ராயா புவாசா கொண்டாடுகிறார்கள்


2014 ஹரி ராயா பாடல்
குறும்படம்

3.தீபாவளி
தீபாவளி என்றால் வரிசையில் விளக்குகள்என்று சொல்வார்கள். இந்த வருடம் 10ஆம் தேதி நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தப்புத்தாண்டு நேப்பாள், இந்தியா, இலங்கை, மியான்மர், மொரிஷியஸ், கயானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, சூரினாம், மலேஷியா, சிங்கப்பூர், பிஜி, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது.



தீபாவளி எப்படி வந்தது?
நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். இதை அறிந்த விஷ்ணு அவனைக் கொல்ல நினைத்தார். ஆனால், அவன் பூமி தாய்க்குப் பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதைப் பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனைப் போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்குப் பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்குச் சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி வெடித்துக் கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். விஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி அன்று புதிய துணிகள் அணிவார்கள். பலவித இனிப்பு  உணவுகளும் உண்பார்கள். சிலர் மருதாணியை கைகளில் பூசுவார்கள். வீட்டிற்கு வெளியே கோலம் போடுவார்கள்.

லிட்டில் இந்தியாவண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்படும். அங்கே நிறைய சந்தைகள் உள்ளன. சந்தைகளில் உணவு, பலகாரம், துணிகள் விற்கபடும். மேலும், ‘அமர்க்களத் தீபாவளிஎன்ற நிகழ்ச்சியை வசந்தம் அலைவரிசையில்  ஒளிபரப்புவார்கள். எல்லாரும் குதுகலமாக இருப்பார்கள்.


சுவா சூ காங் தீபாவளி கொண்டாட்டம்






 வீடியோ
சிங்கப்பூர் தீபாவளி கொண்டாட்டம்

2014 தீபாவளி பாடல்



குறும்படம் (வினோத்)




4.கிறிஸ்மஸ்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நினைவாகக் கிறிஸ்மஸ் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் 25ஆம் தேதி டிசம்பரில் கொண்டாடப்படுகிறது. ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, கம்போடியா, சீனா, வட கொரியா,ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 




அவர்கள் வீடுகளை அலங்காரிப்பார்கள். வீடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்காரிப்பார்கள். பரிசுகளையும் மரத்தின் கீழ் வைப்பார்கள். நிறைய உணவுகளும் பலகாரங்களும் தயாரிப்பார்கள். அவர்கள் தேவாலயத்திற்குச் செல்வார்கள். அங்கே இசைக்கருவிகள் இசைப்பார்கள் மற்றும் பாடல் பாடுவார்கள். அது மட்டும் இல்லாமல், கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடம் அணிவார்கள். வான்கோழி, வாத்து ஆகியவற்றின் இறைச்சியைச் சமைப்பார்கள். குழம்பு, உருளைக்கிழங்கு, காய்கறிகளும் தயாரிப்பார்கள். கிறிஸ்துமஸ் புட்டிங், மின்ச் பாய்ச், பழ கேக் மற்றும் யூல் லாக்கும் தயாரிப்பார்கள்.


சிங்கப்பூர் கிறிஸ்மஸ்  கொணடாட்டம்


குறும்படம் (நைட் பிபோர் கிறிஸ்துமஸ்)


No comments:

Post a Comment