சிங்கப்பூரின் சிறப்பு உணவுகள்

சிங்கப்பூரில் பலவிதமான சிறப்பு உணவுகள் இருக்கின்றன. சிங்கப்பூர் ''உணவுகளின்  சொர்க்கம்'' என்று பலரால் அழைக்கப்படுகிறது. சில உணவுகள் சீன, மலாய் மற்றும் இந்திய சமையல் குறிப்புகள்  கலந்தும் சில உணவு வகைகள் சிறப்பாக சமைக்கப்படுகின்றன. 
 சிங்கப்பூரின் சிறப்பு உணவுகள் (சீன உணவு)
இந்த உணவுகள் பல தெற்கு சீனாவில் இருந்து குடியேறியவர்கள் (ஹொக்கியான், தியோசு, காண்டோனீஸ், ஹாக்கா மற்றும் ஹையானிஸ்) மூலம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டன.

கோழி சோறு
தெற்கு சீனாவில் ஹைனன் மாகாணத்தில் வாழ்ந்தச் சீன குடியேறிர்கள் இதை சிங்கப்பூரில் அறிமுகம் செய்தனர். இன்று, இது சிங்கப்பூரின் தேசிய உணவு என்று சொல்லலாம். இதை நிறைய சிங்கப்பூரர்கள் விரும்பி உண்கிறார்கள்.

ஹோக்கியேன் மீ
சிங்கப்பூர் ஹோக்கியேன் மீ இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்  தெற்கு சீனாவில் புஜியான் சீன கப்பல்துறை ஊழியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

மிளகாய் நண்டு
இது சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கிறது. இந்த உணவையும் நிறைய சிங்கப்பூரர்கள் விரும்பி உண்பார்கள்.சிங்கப்பூரின் சிறப்பு உணவுகள் (மலாய் உணவு)
இந்த உணவுகள் மலாய்  பெனின்சுலா , சுமத்ரா, ஜாவா, மற்றும் ரியா தீவுகள் போன்ற நாடுகளிலிருந்து வந்த  மக்களால் இவை சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டன.
நாசி லமாக்
இது சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கிறது. சில மலாய் இனத்தவர்கள் காலை சிற்றுண்டிக்கு உண்பார்கள்.

நாசி பதாங்
இது சிங்கப்பூரிலும் பிரபலமாக இருக்கிறது. சில சிங்கப்பூரர்கள் இதை எப்பொழுதும் சாப்பிடுவார்கள். சிங்கப்பூரின் சிறப்பு உணவுகள் (இந்திய உணவு)
வட இந்திய மற்றும் தெற்கு இந்திய  உணவுகளை சிங்கப்பூரில் காணலாம்.
இந்தியன் ரோஜாக்
இது ஒரு பாரம்பரிய பழ மற்றும் காய்கறி சாலட் உணவு. இது இந்தோனேஷியாவில், மலேஷியாவில் மற்றும் சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கிறது.  "ரோஜாக்" என்றால்  'கலவை' என்று பொருள்.

மீன் தலை கறி
 இது சிங்கப்பூர் மலையாளிகளால் உருவாகப்பட்டது. இந்த உணவு சீன மற்றும் மலாய் சமையல் குறிப்பு சேர்த்து கலந்து செய்யப்பட்டது.
 சிங்கப்பூரின் சிறப்பு உணவுகள் (மேற்கத்திய உணவு)
சர்லோய்ன் மாமிசம், கோழி அல்லது ஆட்டு சாப்ஸ், மீன் மற்றும் சிப்ஸ், வேகவைத்த பீன்ஸ், பொறித்த கோழி இறக்கைகள், மற்றும் சீஸ் ஃபிரைஸ் போன்ற உணவுகள் சிங்கப்பூரில் பிரபலமாக உள்ளன. இவை கோபித்தியாம்யில் காணலாம்.

சிங்கப்பூர் பழங்கள்
தூரியன், மாங்கோஸ்டின், பலாப்பழம், லோங்கான், லைச்சி, ரம்புட்டான், அன்னாசி பழம் போன்ற பழங்கள் சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கின்றன. இந்த பழங்கள் சில இனிப்பு உணவுகளில் மற்றும் ரோஜாக்யிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இனிப்பு வகைகள்
சேன்டோல், ஐஸ் கச்சாங், அன்னாசி தாட், பொபொசாச்சா, ஹானிதியு சாகோ போன்ற இனிப்பு வகைகள் சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கின்றன.


பானங்கள்
சோயா பீன் பானம், பான்டோங், கிரிஸான்தமம் தேநீர், மிலோ டைனோசர், கரும்பு சாறு, காபி சி, காபி ஓ, தே தாரிக், தே ஓ, தே சி போன்ற பானங்கள் சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கின்றன.
No comments:

Post a Comment