அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் விழாக்கள்

சிங்கப்பூரில் நாம் அனைவரும் கொண்டாடும் விழாக்கள் இருக்கின்றன. இந்த வலைப்பதிவில் முன்று முக்கிய பண்டிகைகள் பற்றி எழுதப்போகிறேன்.

1. சிங்கை ஊர்வலம் 

சிங்கை கொண்டாட்டத்திற்குக் காரணம் சீன தெய்வங்களின் பிறந்த நாள் அல்லது மெர்சி தேவி ஊர்வலம் ஆகும்.  PAYM (மக்கள் சங்கம் இளைஞர் இயக்கம்) ஆண்டுதோறும் சிங்கை ஊர்வலத்தில் கலந்துக்கொள்வார்கள். இந்த வருடம், இந்தப் பெரிய கொண்டாட்டத்தில் 15 குழுக்கள் இருக்கின்றன. அதில் 760 வெளிநாட்டுக் கலைஞர்களும் மற்றும் 150 நிறுவனங்களும் இருக்கின்றன. அவர்கள் 11,000 பண்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றார்கள். மேலும், இந்த வருடம் கருப்பொருள் "நாங்கள் சிங்கப்பூரை நேசிக்கிறோம்". 27 மற்றும் 28 பிப்ரவரியில்  நடைபெற்றது.


2015 சிங்கை ஊர்வலம்

2015 சிங்கை ஊர்வலம் (புக்கிட் பாஞ்சாங்)


2. இன நல்லிணக்கம் தினம்
சிங்கப்பூரில் ஜூலை 21இல் இனநல்லிணக்கம் கொண்டாடப்படுகிறது. ஜூலை 21, 1964 ஆம் ஆண்டு அன்று நடந்த, இன கலவரங்கள் நினைவாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
பள்ளிகளில் மற்ற இனத்தவரின் கலாச்சாரத்தையும் மற்றும் பண்பாட்டையும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். மாணவர்கள் சியோங் சாம், பாஜு குரோங் ,பஞ்சாபி சூட் போன்ற பாரம்பரிய பிற இனத்தவரின் ஆடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடுவார்கள்.
2014 இன நல்லிணக்கம் தினம்
3. சிங்கப்பூர் தேசிய தினம்

ஒவ்வொரு வருடமும் 9 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் தேசியத்தினம் கொண்டாடப்படுகிறது.  1963ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேஷியாவிலிருந்து பிரிந்து, சுதந்திரம் பெற்றதால், அதன் நினைவாக  இவ்விழாக் கொண்டாடப்படுகிறது. தேசிய தின அணிவகுப்பின்போது, சிங்கப்பூரின் பிரதமர் சிறப்புரை ஆற்றுவார். மேலும் வானவேடிக்கைள் நடைபெறும்.




2014 சிங்கப்பூர் தேசிய தினம் பாடல்





No comments:

Post a Comment