உடைகள்

சிங்கப்பூரில் பல்வேறு இனமக்கள் இருப்பதால், இங்கே அவரவர் இனத்திற்கு ஏற்ற உடைகள் இருக்கின்றன.

சீன உடைகள்

பெரும்பாலும் சீனர்கள் சியோங் சாம், சாங் சான் அணிவார்கள். ஆனால், இப்பொழுது, இளைஞர்கள் சட்டையும் அரைக்கால்சட்டையும் அணிகிறார்கள். எனினும் சிவப்பு நிறத்தில் அணியும் வழக்கத்தை அவர்கள் கைவிடவில்லை. சிவப்பு நிறம் அதிர்ஷ்டம் தரும் என்று நம்புகிறார்கள்.

மலாய் உடைகள்

பெரும்பாலும் மலாய்காரர்கள் பாஜு குரோங், பாஜு மலாய்யு அணிவார்கள்.

இஸ்லாம் பெண்கள் துதோங் (Tudung) அணிவார்கள். இஸ்லாம் ஆண்கள்  சோங்கோக்(Songkok) மற்றும் சாரோங்(Sarong) அணிவார்கள்.

ஏன் இந்த ஆடையை அணிகிறார்கள்?

அவர்கள் இஸ்லாமியம் மரபினைப் பின்பற்ற வேண்டும் என்பதாலும், அவர்களுடைய நடத்தை, பழக்கம் மற்றும் பேச்சில் ஒழுக்கம் இருக்கவேண்டியது அவசியம் என்பதாலும் அவர்கள் இவ்வாடையை அணிகிறார்கள்.




ஜாவானிஸ், சுந்தானிஸ் மற்றும் பாலினிஸ்

இவர்கள் பாடிக் (Batik), பேசீ (Peci) மற்றும் கபாயா (Kebaya) அணிவார்கள். பெண்கள் கபாயா அணிவார்கள். ஆண்கள் பேசீ அணிவார்கள். இது சோங்கோங் மாதிரியாக இருக்கும். ஆண்களும் பெண்களும் பாடிக் அணிவார்கள்.


 

இந்திய உடைகள்

பெரும்பாலும் இந்தியர்கள் பாவாடை, சுடிதார்,புடவை, ஜிப்பா அணிவார்கள்.
 

பெண் ஆடைகள்
புடவை பெரும்பாலும் இதைத் தென் இந்தியர்கள் அணிவார்கள்.
  
 

காஹரா சோலி(Ghagra Chol)அல்லது லேகங்கா சோலி( Lehenga Choli).

பாஞ்சாப் மக்கள் இதைத் திருமணம் மற்றும் விழாக்களின்போது அணிவார்கள்.




சால்வார் காமிஸ் (Salwar kameez) அல்லது பஞ்சாபி உடை (Punjabi Suit)

இவை சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கின்றன. பெரும்பாலும் பஞ்சாப் மக்கள் இதை அணிவார்கள். இதைத் துப்பட்டாவுடன் அணிவார்கள்.



சுடிதார் (Churidaar)

இது சால்வார் காமிஸ் போல இருக்கும்.




பட்டு பாவாடை (Pattu Pavadai)  அல்லது லேகாங்கா தாவணி (Langa davani)

குழந்தைகளும் பெண்களும் இந்த ஆடையை அணிவார்கள். 
 


ஆண்க்ள் அணியும் உடைகள்
தோத்தி (Dhoti) அல்லது லுங்கி (Lungi)
இதை ஆண்கள் அணிவார்கள். பெரும்பாலும் இது கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் அணிவார்கள்.

சார்வாணி(Sherwani)

இது சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கின்றது. இது ஆண்களால் அணியப்படுகிறது.


தாஸ்தார் (Dastar)

இது ஒரு தலைப்பாகை. இதை சிங்க்  மதத்தைச் சேர்ந்தவர்கள் அணிவார்கள்.
  


ஐரோப்பிர்கள் உடைகள்
பெரும்பாலும் ஐரோப்பிர்கள் தேவாலயத்திற்கு வெள்ளை சட்டையும் அல்லது அரைக்கால் சட்டையும் அணிவார்கள். அல்லது பளிச்சென மின்னும் வண்ணங்களில் அணிவார்கள்.






No comments:

Post a Comment